மாற்றுக் கொள்கைகளுக்காக கேந்திர நிலையத்தின் தலவைர் டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்துவிற்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலானது மேற்குலக நாடுகளின் சதித் திட்டம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்கஷ, ஊடகங்களுக்கு தெரிவித்திருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளதுஇலங்கைக்கான அமெரிக்க தூதரக அதிகாரிகளினால் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகைத் திட்டம் தொடர்பில் பாக்கியசோதி சரவணமுத்து வெளியிட்ட கருத்துக்களைத் தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
கடிதம் ஒன்றின் மூலம் அவருக்கு இந்த கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை ரத்து செய்யும் முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை தொடர்ந்தால் கொலை செய்யப் போவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்த கொலை மிரட்டல் கடிதத்தை டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து, இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.
2009ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18ம் திகதி இந்த குறிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொலை மிரட்டல் மெய்யானதா என்பதனை விசாரணை செய்யுமாறு செப்டம்பர் மாதம் 16ம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் கோரியிருந்தார்.
நாட்டை சீர்குலைக்கும் நோக்கில் சில மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசீயா புட்டீனாஸ் இந்தத் தகவல்களை அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளும் அதன் உள்நாட்டு ஆதரவாளர்களும் இணைந்து நாட்டுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டி வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக