புதன், 9 ஜனவரி, 2013

பாராளுமன்றிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க முடியாது – ஜனாதிபதிமக்களின் இறையாண்மைக்கு துரோகம் இழைக்க எவருக்கும் அனுமதியளிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்தரணி என்ற ரீதியில் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை பாதுகாக்க வேண்டியது அவசியமானது எனவும், அனைவரும் நீதிமன்றின் சுயாதீனத்தன்மையை உறுதி செய்ய பாடுபட வேண்டுமெனவும் அவா குறிப்பிட்டுள்ளார்.

உயர் நீதிமன்ற நீதவான்களை பிரதம நீதியரசர் நியமிக்கின்றார், பிரதம நீதியரசரை
ஜனாதிபதி நியமிக்கின்றார், ஜனாதிபதியை மக்கள் நியமிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி குற்றமிழைத்தால் அவருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறைந்தபட்சம் 113 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்ற முடியம் என அவர் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றி;ன் உத்தரவுகளை பிரதம நீதியரசர் ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அசாதாரண சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், உலகில் எங்கும் நடக்காத விடயங்கள் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு சக்திகள் கூட்டாக இணைந்து இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசரின் கணவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜே.வி.பி குற்றம் சுமத்தியது, தற்போது ஜே.வி.பி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிராக குரல்
கொடுக்கின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக