அதன்படி ஒவ்வொரு அரசு சாரா நிதி திட்டங்களும் ஒரு தகவல் முகாமைத்துவ முறைமை மூலம் கண்காணிக்கப்பட வேண்டும். வட மாகாண மக்களிடம் திட்டங்களை செயற்படுத்தும் போது பயனாளிகளின் மீள் வருதலை இத்தகவல் முகாமைத்துவ முறைமை தவிர்க்கும். மேலும் இம் முறைமையானது மக்களின் உண்மையான தேவைகளை அறிய உதவும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அரச சார்பற்ற நிறுவனங்கள் அமுல்படுத்தும் திட்டங்களை கண்காணிக்க தகவல் முகாமைத்துவ முறைமை ஒன்றினை உருவாக்குவது தொடர்பான தொழில்நுட்ப ஆதரவை பெறும் முகமாக யு.என்.ஓ.சி.எச்.ஏ அமைப்பின் பிரதிநிதிகளுடன் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி கலந்துரையாடல் ஒன்றை மேற்கெர்ண்டார்.
இத்தகவல் முகாமைத்துவ முறைமையினூடாக இணைய உதவியுடன் மாகாணத்தில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவு மட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படும்.
இத்தகவல் மேலாண்மை திட்டத்திற்கு மாவட்ட செயலகங்களில் கடமையாற்றும் அலுவலர்கள் மூலம் தரவு பதிவேற்றப்படும் எனவும் தீர்மானம்.
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு அமைக்கும் வீட்டுத்திட்டப் பணிகளுக்கென ஆளுநர் 10 மில்லியன் நிதியுதவி
கிளிநொச்சியில் இராணுவத்தினரால் பொதுமக்களுக்கு அமைத்து வழங்கப்படும் வீட்டுத்திட்டப் பணிகளுக்கென வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி வட மாகாண சபை நிதியிலிருந்து 10 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கில் இராணுவத்தின் இருப்பை தொடர்ந்தும் நிலைநிறுத்திக் கொள்வதற்காக பல முயற்சிக ளையும், மக்களுக்கான உதவித்திட்டங்களையும் தாம் மேற்கொள்வதாக படையினர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இதில் ஒன்றாக மீள்குடியேறிய மக்களுக்கு தாம் வீடுகளை அமைத்து வழங்குவதாக படையினர் தெரிவிக்கின்றனர். ஆனால் அந்த வீடுகள் இடிந்து விழும் நிலையிலும், யுத்தத்தின்போது கைவிட ப்பட்ட வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டுமே கட்டப்படுகின்றது.
இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பினால் இரண்டாம் கட்டமாக அமைக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டப் பணிகளுக்கென முன்னாள் இராணுவத்தளபதியும், தற்போதைய ஆளுநருமா ன சந்திரசிறி வடமாகாண சபைக்குரிய நிதியிலிருந்து 10மில்லியன் ரூபாவை அண்மையில்
வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்ட ளைத்தளபதியிடம் கையளித்துள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக