இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பான இராணுவத்தின் விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கப் படையினருக்கும் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் இராணுவத்தினர் விசாரணைகளை நடத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது.இந்த விசாரணைகள் தொடர்பான இறுதி அறிக்கை இன்றைய தினம் (வியாழக்கிழமை) பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிடம் ஒப்படைக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் விசாரணை நடாத்த நியமிக்கப்பட்ட இராணுவக் குழுவினர் குறுகிய கால நீண்ட கால அடிப்படையிலான பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர், இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பிலான இராணுவ விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
எதிர்காலத்தில் மீளவும் பயங்கரவாதம் தலைதூக்குவதனை தடுக்கவும், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் நிறுவன, நிர்வாக மற்றும் சட்ட ரீதியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இறுதி விசாரணை அறிக்கையை இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, பாதுகாப்புச் செயலாளரிடம் ஒப்படைக்க உள்ளார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக