புதன், 23 ஜனவரி, 2013

ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல - ஹட்சன் சமரசிங

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதல்ல என இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்கள், ஊழல் மோசடிகளுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.தனியார் மற்றும் பொதுத்துறையில் இடம்பெற்ற ஊழல் மோசடி சம்பவங்களுடன் ஷிரானி பண்டாரநாயக்கவிற்கு தொடர்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். கோப் ஆணைக்குழுவின் ஊடாக இந்த ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.உயர் பதவிகளை வகிப்போர் மேற்கொண்டதாக சுமத்தப்படும் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்தாமை அரசாங்கத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு கொள்கைகள் வெளிப்படைத்தன்மை அற்றவை என குற்றச்சாட்டுக்கள் எழக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார்.னவே, குற்றம் சுமத்தப்பட்டவர்களின் பதவி அந்தஸ்தை கருத்திற் கொள்ளாது விசாரணைகள் நடத்தி உரிய தண்டனைகளை விதிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஹட்சன் சமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக