வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

சிறிலங்காவில் நிலைமைகள் மோசமடைந்து செல்கின்றன: - கனடா

இனங்களுக்கிடையிலாக இணக்கப்பாடு எட்டுதல் மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் சிறீலங்கா அரசானது மோசமாக தோல்வியடைந்துள்ளதாக கனடிய குரவரவு மற்றும் பல்கலாச்சார அமைச்சர் ஜேசன் கெனி அவர்கள் மார்க்கம் நகரில் கடந்த வார இறுதியில் நடாத்திய பத்திரிகையாளர்கள் வட்டமேசை மாநாட்டில் வைத்துத் தெரிவித்தார். சனவரி மாத ஆரம்பத்தில் சிறீலங்காவிற்கு உத்தியோக பூர்வ விஐயம் ஒன்றை மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையிலேயே அமைச்சரின் இச்சந்திப்பு நடைபெற்றது. தமது விஐயம் ஆட்களை கடந்திவருவோர் சம்பந்தமாகவே முதன்மையாக அமைந்தாலும் சிறீலங்காவில் இன்றுள்ள நிலைமைகளை தாம் கவனத்தில் கொண்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தனது விஐயத்தின் போது தமிழர் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பு சிறீலங்கா தமிழர் மற்றும் சர்வதேச ஐ.நா தன்னார்வத் தொடண்டர் நிறுவனப் பிரதிநிதிகள் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் துணை அமைச்சர் டிலான் பெரேரா எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிமசிங்க மற்றும் பாதுகாப்புச் செயலர் கோத்தப்பாய ராஐபக்ச ஆகியோரையும் சந்தித்ததாக தெரிவித்தார்.
கனடாவின் கருத்துகளை தாம் வெளிப்படையாக அரச தரப்பினரிடம் தெவித்ததாக கூறிய அமைச்சர் மக்கள் காணாமல் போதல் போரின் இறுதிப்பகுதியிலும் அதன் பின்னரும் புரியப்பட்டதாக தெரிவிக்கப்படும் மோசமான வன்முறைக் குற்றங்கள் குறித்து சிறீலங்கா அரசு பொறுப்புக் கூறத்தவறியுள்ளமாக குற்றம் சாட்டினார்.
வடக்கு கிழக்கில் தொடரும் இராணுவ மயமாக்கம் குறித்தும் தனது கரிசனையை அமைச்சர் மாநாட்டில் வெளியிட்டார். இலங்கையில் தொடரும் நிலைமைகள் மற்றும் தமது சந்திப்புக்கள் அனைத்தும் கனடா பிரதமர் ஸ்ரீபன் காப்பரின் சிறீலங்கா குறித்த கரிசனையை உறுப்படுத்துவதாக தெரிவித்த அமைச்சர் இந்நிலைமைகள் கனடியப்பிரதமர் இவ்வருட இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டை புறக்கணிக்கத் தூண்டும் என்றார்.
றீலங்காவின் பிரதம நீதியரசருக்கு எதிரான அரச நடவடிக்கைகள் சட்டத்திற்கு புறம்பானது மட்டுமன்றி கொமன்வெல்த்தின் கொள்ளைகளுக்கே முரணானது என்றார். பொதுவாக சிறீலங்காவின் அரசியல் நிலைமைகள் சீரடைவதற்குப்பதிலாக மோசமடைந்தே செல்வதாக பலராலும் கணிக்கப்படுவதாக மேலும் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து அகதிகள் வெளியேறிச் செல்வதின் பின்னணியில் சிறீலங்கா அரச மட்டத்தின் முக்கியமானவர்கள் இருக்கின்றனர் என்ற செய்தி கனடிய அமைச்சரிடன் பகிரப்பட்ட நிலையில் அதனை உறுதிப்படுத்தும் செய்திகள் தற்போது அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவர ஆரம்பித்துள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக