சிறிலங்கா இராணு வத்தினரால் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அந்த நாட்டு மக்களே இந்த அறிக்கையில் நம்பிக்கை கொள்ளவில்லை எனவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தொலைக் காட்சியான செனல்- 4 வுக்கு அவர் வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உள்நாட்டில் இடம்பெற்ற போரின் போது நிகழ்ந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசோ, இராணுவமோ விசாரணை நடத்துவது என்பது எந்த வகையிலும் பொருத்தமானது அல்ல. யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை தயாரிக்கப்பட வேண்டுமாயின் சிவில் சமூகத்துடனான பங்களிப்புடனேயே அது இடம்பெற வேண்டும். யுத்தக் குற்றங்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு அக்கறையுடன் செயற்படவில்லை என்றும் அவர் குற்றஞ் சாட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக