புதன், 20 பிப்ரவரி, 2013

இலங்கை மீது சர்வதேச சுயாதீன போர்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்

News Serviceஇலங்கை மீது சர்வதேச சுயாதீன போர்குற்ற விசாரணை நடாத்தப்பட வேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் மனித உரிமை கவுன்சிலை வலியுறுத்துமாறு கோரி மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றையும் அது அனுப்பி வைத்துள்ளது.
கடங்த வருடம் ஜெனீவா மனித உரிமை கவுன்சில் அமர்வில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதிலும் தீர்மானத்தின்படி காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் இலங்கை அரசாங்கம் எடுக்கவில்லை என அக்கடிதத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அதற்கு மாறாக கடந்த ஆண்டில் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு இலங்கை அரசாங்கம் அச்சுறுத்தல் விடுத்ததாக மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சுயாதீன விசாரணைகளை வலியுறுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஆதரவளிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக