சனி, 9 பிப்ரவரி, 2013

கொழும்புடன் உள்ள உறவுக்காக தமிழர்களின் உணர்வுகளை நிராகரிக்கமுடியாது!- இந்திய தகவல்துறை அமைச்சர்

லங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாகவும் அது தொடர்பில் தமிழகத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பிலும்; இந்திய மத்திய அரசாங்கம் எதுவும் செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என இந்திய மத்திய தகவல்துறை அமைச்சர் மனீஸ் திவாரி தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களின் விடயத்தில் தமிழகத்தின் உணர்வுகளை இந்திய அரசாங்கம் உணர்கிறது.

அந்த உணர்வுகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டிய தார்மீகக் கடமையாகும்.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான யோசனையின் போது இந்தியா, அதற்கு ஆதரவளித்தன் மூலம் இந்த விடயத்தில் மேலதிக தூதரத்தை கடந்ததாகவும் திவாரி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையுடன் உறவு வைத்திருப்பதனை வைத்துக்கொண்டு இந்திய மக்களின் உணர்வுகளையும் அக்கறையையும் கீழ்மட்டத்தில் பார்க்க முடியாது என்றும் திவாரி தெரிவித்துள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக