கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைபில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரணமாகவே இன்னும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகார பகிர்வு தொடர்பில் வெற்றிகரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது போனது என்பதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதற்காக தெரிவுக் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் அங்கம் வகிக்கவில்லை. அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து தீர்வு குறித்த செயற்பாடுகளை தாமதிக்க செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு பொறுப்பாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றுமொரு விடயமான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் தொடர்பில் கருத்து கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரே இரவில் அமுலாக்கிவிட முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதற்காக குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் அவற்றை அமுலாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் அமெரிக்காவும் - இந்தியாவும் இலங்கைக்கு முக்கியமான நாடுகளாக உள்ள நிலையில், இந்த பிரேரணையினால் அந்த நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர ரீதியான உறவுகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அமைச்சர் இதற்கு தெரிவித்தார். இந்த நாடுகளுடனான இராஜதந்திர உறவு சிறந்தமுறையில் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கோ அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கோ இலங்கையால் இணங்க முடியாமல் போகலாம். அது இந்த நாடுகளுக்கு இடையிலான உறவை நேரடியாக பாதிக்காது என்று தெரிவித்தார். இதேவேளை இந்தியா ஒருவேளை இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாக இருந்தால், இந்தியா தொடர்பில் இலங்கை எந்த நிலைப்பாட்டில் இருக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது. இந்திய அரசாங்கத்திற்கு இருக்கின்ற பிரச்சினைகளை இலங்கை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தனியான கட்சி ஒன்று இல்லை. அது பல்வேறு கட்சிகளின் கூட்டாக உள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அதனால் இந்திய அரசாங்கம் இலங்கையுடான உறவு குறித்து மாத்திரம் இன்றி, தொடர்ந்து ஆட்சி நடத்துவது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
ஞாயிறு, 10 மார்ச், 2013
இந்திய அரசு இலங்கையுடனான உறவு குறித்து மாத்திரமன்றி, தொடர்ந்து ஆட்சி நடத்துவது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் - நிமால் சிறிபால
கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்காவினால் வெளியிடப்பட்டுள்ள தீர்மான வரைபில், இலங்கையில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் இன்னும் அமுலாக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா கருத்து தெரிவிக்கையில்,தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரணமாகவே இன்னும் அதிகாரப் பகிர்வு விடயத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிகார பகிர்வு தொடர்பில் வெற்றிகரமான தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்ள முடியாது போனது என்பதை அமைச்சர் ஏற்றுக் கொண்டார். இதற்காக தெரிவுக் குழு ஒன்று நாடாளுமன்றத்தில் நியமிக்கப்பட்டிருந்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் அங்கம் வகிக்கவில்லை. அவர்கள் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து தீர்வு குறித்த செயற்பாடுகளை தாமதிக்க செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கு இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பே இதற்கு பொறுப்பாளிகள் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் அமெரிக்காவின் பிரேரணையில் வலியுறுத்தப்பட்டுள்ள மற்றுமொரு விடயமான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கம் தொடர்பில் கருத்து கூறுகையில், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஒரே இரவில் அமுலாக்கிவிட முடியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதற்காக குறுங்கால மற்றும் நீண்டகால அடிப்படையில் அவற்றை அமுலாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கிடையில் அமெரிக்காவும் - இந்தியாவும் இலங்கைக்கு முக்கியமான நாடுகளாக உள்ள நிலையில், இந்த பிரேரணையினால் அந்த நாடுகளுடனான இராஜதந்திர உறவுகளில் சிக்கல் ஏற்படுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர ரீதியான உறவுகளில் இது பாதிப்பை ஏற்படுத்தாது என்று அமைச்சர் இதற்கு தெரிவித்தார். இந்த நாடுகளுடனான இராஜதந்திர உறவு சிறந்தமுறையில் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கோ அல்லது அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கோ இலங்கையால் இணங்க முடியாமல் போகலாம். அது இந்த நாடுகளுக்கு இடையிலான உறவை நேரடியாக பாதிக்காது என்று தெரிவித்தார். இதேவேளை இந்தியா ஒருவேளை இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்குமாக இருந்தால், இந்தியா தொடர்பில் இலங்கை எந்த நிலைப்பாட்டில் இருக்கும் என்று கேள்வி எழுப்பபட்டது. இந்திய அரசாங்கத்திற்கு இருக்கின்ற பிரச்சினைகளை இலங்கை புரிந்துக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்திய காங்கிரஸ் அரசாங்கம் தனியான கட்சி ஒன்று இல்லை. அது பல்வேறு கட்சிகளின் கூட்டாக உள்ளது. இந்த நிலையில் அரசாங்கத்தின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அதனால் இந்திய அரசாங்கம் இலங்கையுடான உறவு குறித்து மாத்திரம் இன்றி, தொடர்ந்து ஆட்சி நடத்துவது தொடர்பிலும் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக