வெள்ளி, 8 மார்ச், 2013

ஈழத்தமிழர் விவகாரத்தால் மத்திய அரசு மற்றும் தி.மு.கவிடையே பிரிவு - ஹிந்துஸ்தான் டைம்ஸ்!

News Serviceஇலங்கை தமிழர்களின் விடயம், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இந்திய மத்திய அரசாங்கத்தையும் பிரித்துவிட்டதாக த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய லோக்சபாவில் நேற்றையதினம் இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்சித்தின் பேச்சு எதிர்பார்த்ததைத் போல இருக்கவில்லை என்பதால் திராவிட முன்னேற்றக் கழகம் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. அரசாங்கத்தின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் இதுவே முதல் தடவையாக வெளிநடப்பு செய்கிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியுடனான தமது உறவை தி.மு.க முறித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், காங்கிரஸின் சில உறுப்பினர்கள் தி.மு.கவுக்கு ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக