வெள்ளி, 15 மார்ச், 2013

வலுவிழந்தது அமெரிக்க பிரேரணை: கண்டனம், வலியுறுத்தல், என்ற சொற்கள் நீக்கப்பட்டன‌

இன்று (15/03/013) ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமெரிக்க பிரேரணை மீழ் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதனால் அது மேலும் வலுவிழந்துள்ளதாகவும் ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.
.
இந்த அறிக்கையில் சிறிலங்கா மீது கடும் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. அதாவது இலங்கை அரசாங்கத்தை கண்டித்தல், வலியுறுத்தல், போன்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் தற்போது இவை மேம்படுத்தல் , ஆலோசனை கூறுதல் என மாற்றபப்ட்டுள்ளன.
.
மேலும் அமெரிக்க அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கான நடவடிக்கைகள் பின்னடைந்துள்ளன என்றும் . தமிழர்களுக்கான தீர்வு வழங்குவதில் இலங்கை அரசு தோல்வி கண்டுள்ளது என்றும் கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த சொற்களும் நீக்கப்பட்டுள்ளன.
.
இதன் மூலம் அமெரிக்க அறிக்கை முன்னையதை விட பலவீனமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக