பின் கதவு மூலம் விசாரணைளுக்கு சமூகமளிக்க முடியாது என முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார். லஞ்ச ஊழல் தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஷிரானி பண்டாரநாயக்க இன்று ஆஜராகவுள்ளார்.
இவரை பின் கதவு வழியாக விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு ஆணைக்குழுவின் ஆணையாளர் கோரியுள்ளார்.எனினும், தாம் பின் கதவினால் வர முடியாது எனவும், பிரதான நுழை வாயில் ஊடாகவே விசாரணைகளுக்கு செல்வதாகவும் ஷிரானி தெரிவித்துள்ளார்.ஆணைக்குழுவின் தலைமையகத்தின் பின் கதவுகள் பற்றி தமக்கு தெரியாது எனவும், இதனால் முன் கதவு ஊடாகவே விசாரணைகளுக்கு செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்துள்ளதாக ஷிரானி பண்டாரநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக