ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய அமைச்சரவையில் இருந்து திராவிட முன்னேற்றக் கழகம் வெளியேறுவதாக அறிவித்துள்ளமையை மதிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக தலைவர் கருணாநிதியின் இந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவது தொடர்பான திமுகவின் அறிவிப்பு தொர்பில் ஜெனீவாவில் உள்ள சுமந்திரன் இந்திய ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக