வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கை பொதுநலவாய நாடுகள் மாநாட்டில் கனடிய பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்ற போதிலும் - பிரதமர் பங்கேற்கக் கூடிய சாத்தியமில்லை!

News Serviceஎதிர்வரும் நவம்பர் மாம் 15ஆம் திகதி இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டில், கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பங்கேற்கக் கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவு எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கான கனடாவின் விசேட பிரதிநிதி ஹக் சேகல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெறள்ள மாநாட்டில் பங்கேற்க பிரதமர் ஹார்பர் விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளாவடக்கில் ஜனநயாகம், சட்டம் ஒழுங்கு உரிய முறையில் நிலைநாட்டப்படவில்லை எனவும், நீதிமன்றின் மீது அழுத்தங்கள் பிரயோகிக்ப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் மனித உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்களுக்கு உரிய முறையில் பதிலளிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். கனடாவின் சார்பில் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்ற போதிலும், பிரதமர் பங்கேற்கக் கூடிய சாத்தியமில்லை என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் மாநாட்டை உறுப்பு நாடுகள் புறக்கணிக்க வேண்டுமென கனடா கோரவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக