வெள்ளி, 8 மார்ச், 2013

சரணடைந்தோரையும், காணாமற்போனோரையும் தேடிக்கொடுப்பதற்கான வேண்டுகோள் - ஐநாவிடம் கடிதம் கையளிப்பு

சரணடைந்த, காணாமற் போனோரின் உறவினர் அமைப்பு,

வடகிழக்கு மாகாணம்,

2013.02.28.

ஆணையாளர்

சர்வதேச மனிதஉரிமைகள் ஆணைக்குழு,

ஜெனிவா.

அம்மணி,

சரணடைந்தோரையும், காணாமற்போனோரையும் தேடிக்கொடுப்பதற்கான வேண்டுகோள்
27.02.2013 நேற்றைய தினம் ஜெனிவா அரங்கில் இலங்கை மனித உரிமை தொடர்பாக அரச அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க அவர்களின் உண்மைக்குப் புறம்பான கூற்றுத்தொடர்பாக நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் தங்களுக்கு முறையிடுவது யாதெனில் 16.05.2009ல் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டபின் 18ஆம் திகதி காலை 07.30 மணியளவில் முல்லைத்தீவின் வட்டுவாகல் பிரதேசத்தைக் கடந்து முல்லைத்தீவு கச்சேரியை அண்மித்த செல்வபுரம் பகுதியில் யுத்தம் முடிவடைந்த நிலையில் 18.05.2009ல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் கிறிஸ்தவ பாதிரியார் பிரான்சிஸ் ஜோசப் அவர்கள் தலைமையில் எங்கள் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான தளபதிகள் பொறுப்பாளர்கள், போராளிகள் சரணடைந்தனர் இவர்கள் எங்கு உள்ளார்கள் என்ற விபரம் கூட இன்று வரை இலங்கை அரசினால் எமக்கு தெரிவிக்கப்படாமல் எங்கோ இரகசிய தடுப்புமுகாமில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளார்கள். இதில் சரணடைந்தவர்களில் பலர் குடும்பம் குடும்பமாக சிறுகுழந்தைகளுடன் சரணடைந்தனர். இவர்களின் மனைவி பிள்ளைகள் கூட இரகசிய தடுப்புமுகாமில் உள்ளனர் என்றே நாம் கருதுகிறோம்.

காணாமல் போனோர் தொடர்பாக பெயர் வெளியிடப்படாத பட்டியலினை வெளியிடுவதாக சர்வதேசத்திற்கு அரசாங்கம் மூன்று முறை அறிவித்திருந்தும் இன்றுவரை அந்தப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்பதுதான் உண்மை.

13.05.2012 இலங்கை பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கமைய நாங்கள் 14.05.2012 ல் வவுனியா குற்றத்தடுப்ப பிரிவிற்கு சென்று அங்கும் அவர்களின் விபரம் எதுவும் இல்லை என்ற ஏமாற்றத்துடன் இவர்களின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளோம்.

ஏற்கனவே 2011ம் ஆண்டிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக இதே போன்ற அறிவித்தல் கிடைத்து நாங்கள் இதே இடத்திற்கு சென்று ஏமாற்றத்துடனே திரும்பி வந்தோம். இது தொடர்பாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிட்டோம்.

நாங்கள் இன்றுவரை அரசகட்சி அமைச்சர்களான சிறைச்சாலைகள் புனர்வாழ்வு அமைச்சர் கௌரவ டி.யு.குணசேகரா, கௌரவ அமைச்சர் கஜதீர, நீதி அமைச்சர் கௌரவ ஹக்கிம் சிறுகைத்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பசில்ராஜபக்ஸ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ போன்றோரிடமும் அரச அதிகாரிகளிடமும், இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழு, நல்லிணக்க ஆணைக்குழு அரசசார்பற்ற நிறுவனங்களான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், யுனிசெவ், யுஎன்எச்சிஆர், ஐஓஎம் ஆகியவற்றிலும் அரசசார்பற்ற மனிதஉரிமை அமைப்புகளிலும் அநேகர் முறையிட்டுள்ளோம். காவல்துறை, பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு, பூசா சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, களுத்துறை சிறைச்சாலை எங்கும் தேடிப்பார்த்தும் பயனில்லை. ஏற்கனவே கொடியபோரினால் உடல் உளரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் எம்மை மேலும் மேலும் துன்பப்படுத்துவதும், அச்சுறுத்துவதும் விரக்திநிலைக்கு எம்மை இட்டுச்செல்கின்றது.

போரின் கொடுமையால் இலங்கை அரசின் செல், கிபிர், கொத்துக்குண்டு, நச்சுக்குண்டு வீச்சில் ஒரு தொகுதி உறவுகள் மரணித்து விட்டன. பல உறவுகள் அங்கவீனர்களாக நாதியற்று வாழ்கின்றனர். ஆற்றுப்படுத்துகை இல்லாத பலர் பைத்தியமாக வாழ்கழன்றனர். நாங்களோ கண்முன்னே இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைய கொடுத்துவிட்டு நடைப் பிணங்களாக வாழ்கிறோம்.

கணவனை இழந்த மனைவி, பிள்ளையை இழந்த பெற்றோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள் இவ்வாறான உறவுகள்தான் நாங்கள் இன்றும் தேடிக் கொண்டிருக்கின்றொம். நான்கு வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் வாழ்வாதார திட்டங்கள் இன்றி பிள்ளைகளை வளர்ப்பதற்கம், கல்வி ஊட்டுவதந்கும், பாதுகாப்பாக வளர்ப்பதற்கும் கடும் சிரமங்களை எதிர்கொள்கிறோம். இளவயது கொண்ட நாங்கள் பாதுகாப்பு படையினரிடமிருந்தும், சமூகத்தின் சீர்கெட்ட ஆண்வர்க்கத்தினரிடமிருந்தும் எம்மை பாதுகாத்து கொள்ள மிகவும் சிரமப்படுகின்றோம். எல்லாவற்றிற்கும் மேலாக எங்கள் மீது அன்பு கொண்ட அன்பான உறவுகளை தேடுவதற்காக இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தலையும் மீறி எங்கள் உயிரை இழப்பதற்கும் தயாரான நிலையிலேயே இன்றுவரை உறவுகளை தேடுகின்றோம்.

நாங்கள் எமது பிரதிநிதிகளான தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் காணாமற்போனோர் தொடர்பாக முறைப்பட்டிருந்தோம். அண்மையில் யாழ் ஆயரையும், மன்னார் ஆயரையும் சந்தித்து எமது சரணடைந்த, காணாமற் போன உறவுகளை மீட்டுத்தருமாறு கோரியிருந்தோம். ஆண்டவருக்க அடுத்த நிலையிலுள்ள ஆயரிடம் முறையிட்டோம். ஆண்டவன் செவிகளிலாவது இந்த அபலைகளின் துன்ப துயரங்கள் சென்றடையட்டும் என்பதற்காக முறையிட்டோம்.

சரணடையுங்கள் பொதுமன்னிப்பு பெற்றுதருகின்றோம் என்ற முன்னாள் இந்திய தமிழ்நாடு முதலமைச்சரின் மகள் கனிமொழி மிக நயவஞ்சகமான முறையில் எங்கள் குடும்பத் தலைவர்களை இலங்கை அரசின் சதிவலையில் வீழ்த்திவிட்டனர். ஆனால் இன்றுவரை இதுதொடர்பாக இத்தலைவர்கள் எந்த பரிகாரமும் மேற்கொள்ளவில்லை.

பொதுமன்னிப்பு என்ற பகிரங்க அறிவித்தல் மூலம் நிராயுதபாணிகளான போராளிகள் சரணடைந்து இன்றுவரை 4வருடங்கள் பூர்த்தியடைகின்ற நிலையில் நாம் துன்பத்தின் முடிவில் நிற்கின்றோம். இலங்கை அரசு பொறுப்பு கூறுதன்மையை கொண்டிருக்க வேண்டியது அதன் கடமை. நாங்கள் நல்லிணக்க ஆணைக் குழுவின் முன்னிலையிலும் பலர் நேரடிசாட்சியம் அளித்திருந்தனர். ஆயினும் இன்றுவரை ஆக்கபூர்வமான ஆரம்ப நடவடிக்கை கூடஇடம்பெறவில்லை என்பது வேதனையானதும் கோதனையானதும். அரசினால் நல்லிணக்கத்திற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இன்றும் நாங்கள் எங்கள்; பிள்ளைகளுடன் இராணுவ ,இராணுவபுலனாய்வு மற்றும் அரசசார்பு மாற்றுக்குழுக்களின் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வாழ்ந்து வருகின்றோம்.எம்மில் சிலர் தங்கள் உறவுகளை கண்முன்னே இலங்கை இராணுவத்தினரிடம் சரணடையக் கொடுத்ததாகக் கூறி ஆட்கொணர்வு மனு வழக்கு தாக்கல் செய்ய 2011லும் 2012லும் சட்டவல்லுனர்களை நாடி இருந்தனர். இன்றுவரை அந்த சட்ட வல்லுனர்களால் இலங்கை அரவின் அநீதிக்கு முன் நீதி கோரி வழக்க தாக்கல் செய்ய முடியாமையும் மிகவும் வேதனையானவிடயம். விழுந்தவனை மாடேறி மிதித்தது போன்ற இச்செயற்பாட எம்மை எமது எதிர்கால நம்பிக்கையை வேரோட சாய்த்துள்ளது.2012ல் சர்வதேச செஞ்சிலுவைச்சங்க அறிக்கையின்படி12000ற்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2012ல் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்கள் 5803 இதில் விதவைகள் 3713 என கணக்கிடப்பட்டுள்ளது.(இந்த எண்ணிக்கை மிக குறைவானதாகவே உள்ளது)இன்று சர்வதேசம் மனிதஉரிமை தொடர்பாகவும். காணாமற் போனோர் தொடர்பாகவும் அக்கறை கொண்டுள்ளது. நான்கு வருடஙகள் சுமார் 1150 நாட்கள் கடந்து விட்டன. நாங்கள் பொறுமை இழந்து விட்டோம். நாங்கள் மௌனமாக இருப்பது காணாமல் போன உறவுகள் இலங்கை அரசினால் நிரந்தரமாக காணாமற் போவதற்கான வாய்ப்பினை உருவாக்கிவிடும்.நாங்கள் பாரதூரமான வன்முறைகளை நேரில் கண்ட சாட்சியங்கள் எங்களுக்கு எதிராக குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவர்கள் நீதிமன்றின்முன் நிறுத்தப்பட வேண்டும். நீதி மன்றங்கள் சர்சதேச ரீதியில் அமைந்திருக்க வேண்டும். இலங்கையில் இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றியளிக்க மாட்டாது. நீதி என்பது பாதித்த வன்முறை தொடர்பில் விரும்பும் தீர்வு. உண்மை வெளிவருவது மிகமுக்கியம்.

எனவே போரின் சாட்சியங்களான நாங்கள் உங்களிடம் முறையிடுகின்றோம். இலங்கை அரசின் இரகசிய தடுப்பு முகாம்களில் உள்ள எங்கள் அன்பு உறவுகளை மீட்டுத் தாருங்கள் .இலங்கை அரசின் கால தாமதத்திற்கு தயவுசெய்து துணைபோக வேண்டாம். ஏற்கனவே நாங்கள் 1150 நாட்களை கடந்து விட்டோம். எனவே மன்றாட்டமாக சர்வதேசத்தின் ஐநாசபையில் எங்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றோ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக