ஞாயிறு, 28 ஏப்ரல், 2013

மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு 40 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு?

News Serviceஅரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு 40 ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்து வருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 40 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஆளும் கட்சிக்கு தாவிய சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சந்திரிக்காவின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக