திங்கள், 22 ஏப்ரல், 2013

கோச்சடையான் ரஜினியின் புதிய தோற்றம் வெளியீடு April 22, 2013 01:16 pm

கோச்சடையான் ரஜினியின் புதிய தோற்றம் வெளியீடு கோச்சடையான் படத்தில் ரஜினியின் கெட்டப்பை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர். இதுவரை அப்படத்தின் ஸ்டில்கள் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது முதல் தடவையாக ரஜினியின் மகளும் ´கோச்சடையான்´ படத்தின் டைரக்டருமான சவுந்தர்யா ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ரஜினி, தந்தை-மகன் என இரு வேடங்களில் நடிக்கிறார். அவ்விரு கெட்டப் ஸ்டில்லையும் சவுந்தர்யா வெளியிட்டுள்ளார். ரஜினியின் இரட்டை வேடம் குறித்து சவுந்தர்யா கூறும் போது, ´´படத்தில் தந்தையாக வரும் ரஜினிதான் ´கோச்சடையான்´. நாட்டின் படைத்தளபதியாக வருகிறார். பரதம் ஆடவும் தெரியும். மகன் ரஜினியாக வருபவர் பெயர் பாணா. தந்தையை காட்டிலும் நூறு மடங்கு வேகம் உள்ளவர். எப்போதும் பரபரவென இருப்பார்´´ என்றார்.
கோச்சடையான்´ படத்தை ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். ஆங்கிலத்தில் வெளியான ´அவதார்´, ´டின்டின்´ படங்களை போன்று அனிமேஷன் படமாக ´கோச்சடையான்´ தயாராகியுள்ளது. இதில் சரத்குமார், ஆதி, ஜாக்கி ஷெராப், நாசர் போன்றோரும் நடிக்கின்றனர்.

மகன் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே வருகிறார். தந்தை ரஜினி ஜோடியாக ஷோபனா நடிக்கிறார். ரூ.100 கோடிக்கு மேல் செலவிட்டு இப்படத்தை எடுத்துள்ளனர். டப்பிங், ரீ-ரிக்கார்டிங் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக