வியாழன், 18 ஏப்ரல், 2013

இலங்கையின் பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள்

News Serviceஇலங்கையின் பொதுநலவாய நாடுகள் உறுப்புரிமையை இடைநிறுத்துமாறு பொதுநலவாய நாடுகள் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தென் ஆபிரிக்காவின் கேப் டவுனில் நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகளுக்கு முரணான வகையில் இலங்கை செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வுகளை நடாத்துவது குறித்து மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் மாநாட்டில் இலங்கை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமர்வினை நடாத்துவது அந்த அமைப்பின் நன்மதிப்பிற்கு களங்கத்தை ஏற்படுத்தக் கூடுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொள்கை மீறல்களில் ஈடுபடும் உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தாமை, அமைப்பை பலவீனப்படுத்தக் கூடுமென தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக