ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

யாழிற்கு பயணமாகின்றார் எதிர்க்கட்சித் தலைவர்!

News Serviceஎதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி எதிர்க்கட்சித் எதிர்வரும் 25 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்க்கு வரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு இடங்களுக்கு செல்வதுடன் யாழ்ப்பாணத்தின் பேராயர் பல்கலைக்கழக பிரதிநிதிகள் பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் உட்பட பல உயர்அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து 27 ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கும் 28 ஆம் திகதி மன்னார் மாவட்டத்திற்கும் விஐயம் மேற்கொள்ளவுள்ளார்.இதேவேளை, இந்தியாவின் அழைப்பை ஏற்று டெல்கி சென்று திரும்பிய சில நாட்களிலேயே யாழ்ப்பாணம் மன்னார் வவுனியா கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயத்தினை மேற்கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக