வடமாகணசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவதா? இல்லையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். என விடுதலைப் புலிகள் இயக்கத்தின்முன்னாள் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அரச தரப்பில் தீவிரமாக நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்று ஊடவியலாளர்கள் கேட்ட போதே கே.பி மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா? என்பது பற்றி இதுவரை யோசிக்கவில்லை. எவ்வாறாயினும் நான் தேர்தலில் நிற்கவேண்டுமா இல்லையா? என்பதனை மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும். இப்போதைக்கு நான் சமூக சேவை தொண்டுப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றேன். அதைத் தொடர்ந்து எப்படி முன்னெடுப்பது என்பது பற்றித்தான் சிந்தித்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார் கே.பி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக