வெள்ளி, 19 ஏப்ரல், 2013

தேர்தல்களை இலக்கு வைத்து அரசாங்கம் ஊடகங்களை மௌனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது

News Serviceதேர்தல்களை இலக்கு வைத்து ஊடகங்கள் மீது அரசாங்கம் அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடக் கூடுமென ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள மிக முக்கியமான தேர்தல்களை இலக்கு வைத்து அரசாங்கம் ஊடகங்களை மௌனப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. அண்மையில் இரண்டு தடவைகள் உதயன் பத்திரிகை மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது ஓர் ஆபத்தான நடவடிக்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிரச ஊடக வலையமைப்பின் மீதும், ஊடகவியலாளர்கள் மீதும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஊடகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பிலான கேள்விகளுக்கு தற்போதைய அரசாங்கம் எவ்வித காத்திரமான பதில்களையும் இதுவரையில் அளிக்கவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஊடகங்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அரசாங்கம், அமைதியான பேரணிகள், குப்பை கூளங்களிற்கு எதிராக போராட்டம் நடத்துவோரை தாக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியர்கள் மிக முக்கியமான பிரச்சினைளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக