செவ்வாய், 16 ஏப்ரல், 2013

பொஸ்டன் மரதன் ஓட்டப் போட்டியில் குண்டு வெடிப்பு : இருவர் பலி!

marathanஅமெரிக்க மாநிலமான மசாசுசெட் மாநிலத்தின் தலைநகரான பொஸ்டன் நகரில் இன்று நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 2.56. மணிக்கு நிகழ்ந்த குண்டு வெடிப்பில் இருவர் பலியானதாகவும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டுப்பற்றாளர் தினத்தையொட்டி நடைபெற்ற இந்த மரதன் ஓட்டப் போட்டி நிகழ்வில் மரதன் ஓட்டப் போட்டி நிறைவுபெறும் தருணத்தில் இந்தக் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பு தொடர்பாக அமெரிக்க அதிபர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் இன்றிரவு அமெரிக்க மக்கள் பொஸ்டன் குண்டு வெடிப்பு சம்பவத்தின் துயர நிகழ்வுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.அனைத்து அமெரிக்க மக்களும் இந்த துயரவேளையில் பொஸ்டன் மக்களுடன் ஒன்றிணைந்து நிற்பார்கள். இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் இதனை நிகழ்த்தியவர்களை நாம் கண்டு பிடிப்போம். அதுவரை கற்பனைகளில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயலவேண்டாம். நாம் குற்றவாளிகளை கண்டு பிடித்து நீதியின் கனதியை அவர்களுக்கு உணர்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக