ஞாயிறு, 19 மே, 2013

"யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டம் என்றபெயரில் நாம் பெரிதும் வதைக்கப்பட்டோம்"

யுத்த வெற்றி விழாவால் வதைக்கப்பட்ட சிப்பாய்கள் யுத்த வெற்றி விழாக் கொண்டாட்டம் என்ற பெயரில் தாம் பெரிதும் வதைக்கப்படுவதாக இராணுவச் சிப்பாய்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

"யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டம் என்றபெயரில் நாம் பெரிதும் வதைக்கப்பட்டோம்" கொழும்பில் இருந்து ஜெயாஇன்று கொழும்பு நகரை முடக்கிய யுத்த வெற்றி விழா நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் அணிவகுப்பு நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.

இதில் தமது படைப் பிரிவுகளுடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக ஒவ்வொரு பிரிவினரும் அணி வகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இவர்கள் பல மணி நேரம் இத்தகைய அணிவகுப்பில் ஈடுபட்டமையால் பெரிதும் களைப்படைந்து சோர்ந்த நிலையிலேயே காணப்பட்டனர்.

காலி முகத்திடலில் ஆரம்பித்த இந்த அணி வகுப்பு லேக் ஹவுஸ் சுற்று வட்டத்தை அண்டியே முடிவடைந்தது. அங்கு முடியும் தருவாயில் பல இராணுவ சிப்பாய்களின் முகங்களில் யுத்த வெற்றி விழா குறித்த வெறுப்புத் தன்மையைக் காணக்கூடியதாக இருந்தது.

இவ்வாறான இராணுவச் சிப்பாய்களிடம் நாம் மெதுவாக கதையைக் கொடுத்தோம்.

அவர்கள், "எங்களை வைத்து இந்த அரசு அரசியல் லாபம் காண்கிறது" என்றும், இந்த யுத்த வெற்றி விழாவையிட்டு எம்மை சில நாட்களாக பெரிதும் வதைத்துள்ளனர். இந்த விழாவுக்கான அணி வகுப்பிற்காக நாம் எமது உடலால் மாத்திரமின்றி மனசளவிலும் சோர்ந்த நிலையிலேயே பயிற்சிகளை மேற்கொண்டோம். எமது கைகளில் பெருமளவிலான சுமைகளைச் சுமத்தி வீதி நெடுகிலும் அணி வகுப்பாக நடக்கவிடும்போது நாம் படும் துன்பம் சொல்லிட முடியாது. எனினும், நாம் இலங்கை இராணுவத்தில் இடம் பிடித்தமையையிட்டு பெருமை கொண்டே ஆகவேண்டும் என்றனர்.

"யுத்த வெற்றிவிழாக் கொண்டாட்டம் என்றபெயரில் நாம் பெரிதும் வதைக்கப்பட்டோம்" கொழும்பில் இருந்து ஜெயா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக