வியாழன், 9 மே, 2013

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போகிறதாம்....

முஸ்லிம் காங்கிரஸ் ஜனாதிபதியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போகிறதாம்....
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அதி உயர் பீடத்தினர் ஜனாதிபதியை சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சருடன் முதலில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

பிரதேச முஸ்லிம் மக்கள் தொடர்பான தகவல்கள் திரட்டப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தகவல்கள் திரட்டப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியுடன் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தை நடத்தும் எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் அல்லது விடுதலை செய்யப்பட வேண்டுமென ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக