சனி, 5 ஜூலை, 2014

இலங்கையின் புகழ்பாடும் ஆஸி,பிரதமர் தர்க்கா நகர் வந்தால் தெரியும்-அசாத் சாலி!

mus.asaathali-01-300x225இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள பாப்பரசர், வடபகுதிக்கு சென்றால் வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என அரசாங்கம் அஞ்சுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் புகலிட கோரிக்கையாளர்களை ஏற்றிச் சென்ற படகொன்று, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது மற்றும் அந்த படகுக்கு என்ன நடந்து என்பது பற்றியும் கருத்து வெளியிட்ட அசாத் சாலி, அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இந்த சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கூறினார்.
அவுஸ்திரேலிய பிரதமர், இலங்கை அரசாங்கம் குறித்து புகழ்பாடி வருகிறார். இலங்கை அமைதியான சூழல் நிலவும் நாடு என்றும் கூறுகின்றார். அவர் தர்கா நகருக்கு வந்தால் நாட்டில் நிலவும் அமைதியான சூழலை காணமுடியும் எனவும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.
மேலும், மத விவகார பொலிஸ் பிரிவில் நான் 284 முறைப்பாடுகளை செய்தேன். அவற்றில் எந்த முறைப்பாடு குறித்தும் விசாரணை நடத்தப்படவில்லை. பொசன் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் பொலிஸ் பிரிவை கலைக்க வேண்டும் என்று கூறிய இராவணா பலய தற்போது ஏன் அமைதியாக இருக்கின்றது எனவும் அவர் இங்கு கேள்வி எழுப்பினார்.
அளுத்கமவில் பொதுபல சேனா கூட்டத்தை நடத்துவதற்கு முதல் நாள் அந்த கூட்டத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு நான் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை கேட்டுக்கொண்டேன். இந்த கோரிக்கை பற்றி அமைச்சர் டியூ.குணசேகரவும் பாராளுமன்றத்தில் கூறினார். இவை குறித்து கருத்துக்களை வெளியிடுவதால் அமைச்சர் ஹக்கீம் மற்றும் நான் அடிப்படைவாதிகள் என்றால் எங்களை கைது செய்யுங்கள். அமைச்சர்களும், செயலாளர்களும் கோகணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக