வியாழன், 12 ஜனவரி, 2012

ஆயுதப் போராட்டத்தை தொடங்க திட்டமிடப்படுகிறது என்கிறார் திசாநாயக்க.


தெற்கிலுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டவர்களை இணைத்து ஆயுதப் போராட்டத்தை நடத்துவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நேற்று குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்று கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இம் மாணவர் குழுவினர் ஜே.வி.பியில் இருந்து பிரிந்த குழுவினருடன் அரசியல் தொடர்பு களை கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களை தேடுவதற்காக இம்மாணவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திற்கு வந்தனர். அவர்கள் ஆயுதப் போராட்ட மொன்றை ஆரம்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இதற்கு நாம் அனுமதிக்க முடியாது எனவும் அவர் கூறினார்.
யாழ். பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்கு இந்த வருடத்தின் 573 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு சர்வதேச தரத்திற்கு இந்தப் பல்கலைக் கழகத்தை தரமுயர்த்தவதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொண்டு வருவதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி .திஸ்ஸ நாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட உயர் கல்வி அமைச்சர் தலைமையிலான குழுவினர் யாழ். பல்கலைக் கழகத்திற்கு நேற்று விஜயத்தை மேற்கொண்டனர்.
இந்த விஜயத்தின் போது பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களிற்கு இந்தவருடம் 22 ஆயிரத்து 700 மாணவர்களை புதிதாக இணைத்துள்ளோம்.
இதனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பெரும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. 1இலட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைந்திருந்தார்கள்.
அதில் 65 ஆயிரம் மாணவர்கள் பல்கலைக் கழகங்களுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதுவரை காலமும் 12 ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக் கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள்.
ஆனால், இந்த வருடம் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை நாம் பல்கலைக்கழ கங்களுக்குள் உள்வாங்கியுள்ளோம். இதனால், பல்கலைக்க ழகங்களுக்குள் நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளது.அத்தோடு யாழ்.பல்கலைக்கழகத்தை அபிவிருத்தி செய்வதற்கு பாரிய திட்டங்களை நடை முறைப்படுத்தவுள்ளோம்.
கடந்த 30 வருடமாக இடம்பெற்ற யுத்தத்தால் பல அழிவுகள் ஏற்பட்டன. அத்தோடு விடுதலைப்புலிகளின் பாசறையாக பல்கலைக்கழகங்கள் சில பயன்படுத்தப்பட்டன.
அத்தோடு யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தில் இருந்த பொருட்கள் மூன்று முறை அவர்களினால் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதோடு நின்றுவிடாது மாணவர்களைக் கொண்டு ஆய்வு நடவடிக்கைகளில் பேராசிரியர்களின் விரிவுரையாளர்களும் ஈடுபட வேண்டும்.
அப்போது தான் எமது பல்கலைக்கழகங்களை சர்வதேச தரத்திற்கு தரமுயர்த்த முடியும். வடக்கு கிழக்கை சிங்களமயமாக்க நாம் ஒரு போதும் முயற்சிக்கவில்லை.
சிங்கள் மாணவர்கள் பெறும் புள்ளிகளின் அடிப்படையிலேயே அவர்கள் வடக்கு கிழக்கு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
எந்தவொரு காரணத்திற்காகவேனும் சிங்கள மாணவர்களின் இசற் புள்ளியைக் குறித்து அவர்களை இங்குள்ள பல்கலைக்கழகங்களிற்கு உள்வாங்க மானியங்கள் ஆணைக்குழு முயற்சிப்பதில்லை.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய பணத்தின் ஒரு பகுதியை தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்துச்சென்றனர். குறிப்பாக திருகோணமலைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிய பணத்தில் நூற்றுக்கு அறுபது வீதத்தை விடுதலைப்புலிகளே அபகரித்துக்கொண்டனர்.
அவர்கள் பல்வேறு விதத்தில் எங்கள் கல்வி நடவடிக்கைகளை சீர்குலைத்துள்ளனர். மேலும் யாழ். பல்கலைக் கழகத்தில் உடனடியாக 2 விடுதிகளை அமைக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.அது மட்டுமன்றிஇன்னும் 2 விடுதிகளை விரைவில் அமைத்து தரமுடிவெடுத்துள்ளோம்.
பொறியியல், விவசாயப்பீடங்களை கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல வேண்டியிருப்பதனால் பல வேலைகள் அங்கு செய்ய வேண்டியுள்ளது.
அத்தோடு இந்திய அரசின் உதவியுடனும்அவுஸ்ரேலிய அரசின் உதவியுடனும் இங்குபல அபிவிருத்திகளை மேற்கொள்ளவுள்ளோம். பகிடிவதையால் மாணவர்களின் திறமையால் மழுங்கடிக்கப் படுகின்றது எனவே அவ்வாறு பகிடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படமாட்டாதது.
அரசியல் விடயங்கள் தொடர்பாக மாணவர்கள் சுதந்திரமாக பேச முடியும் ஆனால் நீங்கள் ஏன் பல்கலைக்கழகம் வந்தீர்கள் என்பதை மனதில’ நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் வடக்கின் கல்வியில் வீழ்ச்சியேற்பட்டுள்ளது. கடந்த காலத்தில் ஆங்கிலத்தில் புலமை வாய்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனால் ஆங்கில அறிவு தற்போது வடக்கில் குறைந்து செல்கிறது. இது தவிர கிழக்குப்பகுதியில் ஆங்கில அறிவு மிகக்குன்றிச்செல்கின்றது.
இது இவ்வாறு இருக்கையில் ஜே.வி.பி கட்சியின் இரு பிரிவில் ஒரு பிரிவினர் மீண்டும் ஆயுதப் போராட்டத்திற்கு தயாராகின்றனர். அவர்கள் யாழ். பல்கலைக்கழகத்திற்கும் அண்மையில் வந்து சென்றுள்ளார்கள். எனவே மாணவர் ஒன்றியத்தினருக்கு பாரிய பொறுப்புண்டு. இவர்கள் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டும். தனிநாடு வேண்டும்என கூறியவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.
இப்போதும் இங்கு ஒரு சில தமிழரசியல்வாதிகள் உள்ளனர். இவர்கள் பிள்ளைப் போராட்த்தில் ஈடுபட்டநிலை வெளிநாடுகளில் உள்ளார்கள்.
இந்த நாட்டில் இந்துமதத்தவர்களும் பௌத்த மதத்தவர்களும் இந்திலையில் இருந்து வந்தவர்கள் பின்பு முஸ்லிம் மக்கள் வந்தார்கள் அவர்களில் பெண்கள் எங்கும் வரவில்லை.
இவ்வாறு வந்த முஸ்லிம் ஆண்கள் சிங்களப் பெண்களையும் தமிழ்ப் பெண்களையும் திருமணம் செய்து கொண்டனர்.
எனவே, நாம் எல்லோரும் ஒரே இனத்தவர்கள் இந்த ஒற்றுமையை பிரிக்க சிலர் முயற்சிக்கின்றனர். இதற்கு ஒருபாதும் இடமளிக்கக்கூடாது. அத்தோடு இலங்கை சிறிய தீவு இதைப் பிரிக்க முடியாது.
மேலும் சிங்கள மாணவர்கள் யாழ். மாவ ட்டத்திற்கு வந்துள்ளீர்கள் உங்களுக்கு தமிழ் மொழியை அறிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ் மாணவர்கள் அவர்களுடன் சகோதரத்துடன் பழகி அவர்களின் கல்விக்கு உதவ வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக