சனி, 14 ஜனவரி, 2012

நெடுந்தீவு பிரபலமாகிறது

சப்த தீவுகளில் ஒன்றான நெடுந்தீவு தீவுப்பகுதி மக்களுக்கு மிகவும் பரீச்சயமானது.
அழகான,அதே நேரம் கடல் பனை  வளங்களைக் கொண்ட குட்டித் தீவு.குறிகட்டுவான்
 இறங்கு துறையில்  இருந்து இரு மணி நேர படகோட்டம்.அமைதி நிறைந்த மக்கள்
வாழும் பிரதேசம்.குதிரைகளின் சாம்ராஜ்யம் இங்குதான் உள்ளது.வந்தாரை வரவேற்கும்
பண்பு கொண்ட மக்கள் வாழும் பிரதேசம் மட்டுமன்றி வந்தவர்கள் திரும்பிச் செலலும் போது கைகளில் ஏதாவது கொடுத்து மகிழ்ச்சிப் படுத்தும் பாரம்பரிய பழக்கமுடையோர்.இவர்களுக்கு இப்போது  ஒரு இனிப்புச் செய்தி காத்திருக்கிறது.அங்கு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்று உருவாகப் போகின்றது என்பதே.எப்படியாம்? நெடுந்தீவு மக்கள் தேர்தலின்போது ஜனாதிபதி மகிந்தாவுக்கு அளித்த அமோக ஆதரவின் காரணமாக இந்த அதிர்டம் அவர்களுக்கு அடித்துள்ளது.அப்படி நிகழ்ந்தால் அபிவிருத்தி
வேலை வாய்ப்பு என பல துறைகளில் முன்னேறும்  வாய்ப்பு அந்த
மக்களுக்கு கிடைக்கலாம்.குறிகட்டுவான் யாழ் வீதியும் திருத்தப்படலாம்
போலும்.எது எப்படியோ நல்ல காரியம் சீக்கிரம் நடக்கட்டும்.

  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக