செவ்வாய், 17 ஜனவரி, 2012

யாழ்.தினக்குரல் விருந்தினர் விடுதியில் தாக்குதல்!



யாழ்.தினக்குரல் விருந்தினர் விடுதியில் தரித்து வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.நல்லூரில் உள்ள தினக்குரல் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த மூவர் இரும்புகளால் அங்கு தரித்திருந்த வாகனங்கள் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.

சத்தம் கேட்டு உள்ளிருந்தவர்கள் வெளியே சென்று பார்த்த போது தாக்குதல் நடத்தியிவர்கள் ஓடிவிட்டதாகவும், அவர்கள் தாக்குதலுக்கு பயன்படுத்திய இரும்புகள் அங்கு காணப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக