செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

அராலியில் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்!

யாழ்ப்பாணம் அராலி, வசந்தபுரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி, அருகிலுள்ள வீட்டிற்கு இரவு வேளையில் நெருப்புப்பெட்டி வாங்குவதற்காகச் சென்றபோதே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சந்தேக நபர் சிறுமியின் வாயில் துணியைத் திணித்துவிட்டு பாலியல் வல்லுறவு மேற்கொண்டதாகவும், மருத்துவ பரிசோதனைக்காக சிறுமியும் சந்தேக நபரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.சந்தேக நபர்  நாளை யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக