சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சுதந்திரமானதும்- நம்பகமானதுமான விசாரணைகளை மேற்கொள்ள, அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகளில் அமெரிக்கா இப்போதைக்கு இறங்காது என்று அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் தெற்கு, மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் றொபேட் ஓ பிளேக்கிடம் அனைத்துலக விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டம் ஏதாவது அமெரிக்காவிடம் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த பிளேக், “தற்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் தொடர்பாகவே அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது“ என்று தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் நம்பகமான உள்ளகப் பொறிமுறையை ஏற்படுத்தும் என்றும் தாம் நம்புவதாகவும் தெரிவித்த அவர், “உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்படுத்துவதில் ஏதாவது குறைகள் காணப்படுமாயின், அனைத்துலக விசாரணைக்கான அழுத்தங்கள் நிச்சயம் இருக்கும்.“ என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“பொறுப்புக்கூறும் விவகாரத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போதியளவில் கவனத்தில் கொள்ளவில்லை“ என்று குற்றம்சாட்டியுள்ள அவர், “என்ன நடந்தது என்று விசாரிப்பது பொறுப்புகூறுதல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றின் முக்கியமான பகுதி“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக