செவ்வாய், 26 ஜூன், 2012

மாணவர்களது கல்வியைச் சீர்குலைத்த கல்வி அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது!

Vollbild anzeigenமாணவர்களுடைய கல்வியினைச் சீர்குலைத்த அமைச்சர் தொடர்ந்தும் பதவி வகிப்பதை அனுமதிக்கக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த க.பொ.த உயர்ததரப் பரீட்சையின் இசட் பெறுபேறுகளின் அடிப்படையில் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனாலும் அதனை கல்வி அமைச்சர் உள்வாங்கிக் கொள்ளவில்லை. இதனால் மாணவர்களது கல்வியைச் சீர் குலைத்த கல்வி அமைச்சர் பதவியில் இருக்கக் கூடாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2011ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூன்று லட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் கல்வி அமைச்சு விளையாடியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மாணவர்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும், மாணவர்களின் உரிமையை மீறிச் செயற்பட்ட அமைச்சர் தொடர்ந்தும் பதவி வகிப்பது நியாயமாகுமாஎன ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு 294000 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத்தோற்றியதாகவும் இதில் 140000 மாணவர்கள் விடைத்தாள் மீள் மதிப்பீட்டிற்காக 750ரூபா செலுத்தி விண்ணப்பம் செய்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
2011ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் படி புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாக இசட் புள்ளிகள் வழங்கப்படாமல் இரண்டினையும் இணைந்ததாகவே இசட் புள்ளிகள் வெளியிடப்பட்டன.
இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இதனையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் மாணவர்கள் முறைப்பாட்டினைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக