இலங்கையில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட குடிசன மதிப்பீட்டின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 8 இலட்சத்து 69 ஆயிரம் எனவும், அதில் ஒரு கோடியே 5 இலட்சத்து 12 ஆயிரம் பெண்களும் ஒரு கோடியே 3 இலட்சத்து 57 ஆயிரம் ஆண்களும் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த கணிப்பீட்டின் படி நாட்டில் 36 ஆயிரத்து 807 கிராமங்களும், ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக 123 குடும்பங்கள் வாழ்வதாகவும் 313 பிரதேச செயலகங்களும் 14 ஆயிரத்து 022 கிராம சேவகர் பிரிவுகளும் நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக