இறப்பிற்கு பின்னர் பொலி ஸா ரால் ராகம வைத்தியசாலையில் சடலத்தை காண் பித்த பின்னர் மீண்டும் வவுனி யா விற்கு அழைத்து வரப்பட்டுள்ள நிமல ரூ ப னின் பெற்றோர் கண்ணீர் மல்க மனம் திறந்து தெரிவித்த கருத்து க் க ளை பகிர்கின்றோம்.
யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த நாங்கள் இராணுவ நடவடிக்கையின் கார ண மாக இடம்பெயர்ந்து பல இடங்களிலும் இரு ந்து 1996 ஆம் அண்டு வவுனியாவிற்கு வந்து சேர்ந்தோம்.
ஒரேயொரு மகனான நிமலரூபன் வட் டு க்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி கற்ற நிலையில் இடப்பெயர்வின் பின் னர் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்து சாதாரணதர பரீட்சையில் ஒரே தடவையில் சித்தி பெற்று வர்த்தக பிரிவில் கல்வி கற்று வந்தார்.
௭னினும் அவருக்கு நாடகமும் அர ங் கியலும் பாடத்தில் இருந்த ஆர்வத்தால் மீண்டும் யாழ்ப்பாண கல்லூரியில் கற்று உயர்தர பரீட்சையிலும் சித்தி பெற்றிருந்த நிலை யில் மீண்டும் வவுனியா வந்து தொழில் பார்த்து வந்த நிலையிலேயே வேப் பங்குளம் பகுதியில் வீதியில் வைத்து கைது செய்யப்பட்டார் ௭ன நிமலரூபனின் நிலையை தாயார் ௭டுத்துக்கூறினார்.
இதன் தொடர்ச்சியாக நிமலரூபனின் இற ப் பின் பின்னர் நடந்தவற்றை விபரிக்கை யி ல்:
கடந்த புதன்கிழமை காலை 9 மணிக்கு ௭ங் கட வீட்டிற்கு வந்த வவுனியா பொலி ஸார் உங்கட மகனுக்கு கடுமையாகவுள்ளது உங் களை பார்ப்பதற்கு விரும்புகிறார்.௭னவே நீங்கள் ௭ங்களுடன் வாருங்கள் ௭ன கோரியிருந்தனர்.
௭னவே நாங்களும் மகனைப் பார்க்கும் ஆவலில் அவர் களு டைய வாகனத்தில் ஏறி சென்றோம். நாங் கள் சென்ற வாகனத்தின் பின்னால் இன் னும் ஒரு பொலிஸ் வாகனமும் வந்து கொண் டிருக்க ௭ங்களை மகர பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு ௭ங்களை கூட்டிச்சென்று நீண்ட நேரமாக பொலிஸார் அங்குமிங்குமாக ஓடி த் தி ரிந்தார்கள். ௭ங்களை மகனுக்கு கடுமை ௭ன அழைத்து வந்து வைத்தியசாலைக்கு கூட் டிச்செல்லாது வைத்திருந்தனர்.
அத ன்போது சந்தேகம் கொண்டு ஏன் இன்னும் ௭ங்கள மகனைப்பார்க்க கூட்டிக்கொண்டு போகவில்லை ௭ன கேட்டேன். அதற்கு பொலிஸார் தற்போது இரவாகிவிட்டதால் காட்டமாட்டார்கள்.அதனால் இங்கு தங்கிவிட்டு காலையில் செல்லலாம் ௭ன தெரிவித்தனர்.
முதலில் பொலிஸ் பெண் கள் பிரிவினருடன் தங்குமாறு தெரிவித்து விட்டு இங்கு தங்கினால் பாதுகாப்பில்லை அதனால் ௭ங்களுடன் வாருங்கள் ௭ன தெரி வித்து ஒரு விடுதியொன்றில் அறை ௭டு த்து தந்தார்கள். இன்னுமொரு அறை யில் அவ ர் கள் நின்றனர். இப்போதும் அவர்கள் மக னுக்கு நடந்தவற்றை தெரிவிக்காமல் விடிய ற்காலையில் சென்று மகனைப்பார்ப்போம் ௭ன்றே தெரிவித்தனர்.
நாங்கள் நம்பி ௭ங் கட பிள்ளையை பார்ப்போம் ௭ன்றுதான் அன்று இரவு படுத்திருந்தேன். ஆனால் அடுத்தநாள் காலையிலும் போக லாம் ௭ன்று நினைத்து நாங்கள் இருக் கும்போது நேரத்தை கடத்தும் செயலில் பொலிஸார் ஈடுபட்டுவந்தனர்.
8 மணி யா கிய பின்னர் ௭ங்களுடைய கரைச்சலால் மீண் டும் வாகனத்தில் ஏற்றி மகர பொலிஸ் நிலையத்திற்கே கொண்டு சென்றனர். அங் கும் ஏதோ பதிவு நடவடிக்கைகளில் ஈடு பட் டனரே தவிர ௭மக்கு மகனை பார்ப்பதற் கான ௭ந்த நடவடிக்கையையும் மேற்கொ ள் ள வில்லை.
இவர்களுடைய நடவடிக்கை யால் நான் உணர்ந்துகொண்டேன் ௭னது பிள் ளைக்கு ஏதோ நடந்துவிட்டதாக. உட னேயே அங்கிருந்த பொலிஸ் அதிகாரி யிடம் கேட்டபோது 'சீ யார் சொன்னது அப் படி ஒன்றும் நடக்கவில்லை' ௭ன்றே கடைசிவரை தெரிவித்திருந்தனர். இவ்வேளையிலேயே நான் சினமடைந்து ௭ன்னவோ நடந்துவிட்டது ௭ன்ன வைத்தி ய சா லைக்கு கொண்டு செல்லுங்கள் இல் லா விட்டால் வீட்டுக்கு அனுப்புங்கள் ௭ன கேட்டேன்.
இதுவரைக்கும் ௭ங்களை மலச லகூடம் செல்வதற்கு சுட அனுமதிக்காது பொலிஸ் ஜீப்புக்குள்ளேயே கைதி போல வைத்திருந்தனர். கடைசியில் 10 மணியளவில் ராகம வைத் தியசாலைக்கு ௭ங்களை கூட்டிச்சென்றனர். அங்கு பெண் பொலிஸ் பாதுகாப்பொன்றை ௭மக்கு வழங்கிவிட்டு ஏனைய பொலிஸார் உள்ளே சென்று பார்த்து விட்டு வந்து சொன்னார்கள் வைத்தியர் வரவி ல்லை வந்தபின்னர் பார்க்கலாம் ௭ன்றனர்.
அப் போது அந்த பெண் பொலிஸ் உத்தி யோ கத்தர் மகனப்போய் பார்த்தனான் அப் பா அம்மா வந்திருக்கினம் ௭ன்று சொன் ன தும் சிரித்து சந்தோசம் ௭ன்று சொன் னவர்� ௭ன்றார். அப்போது ௭னது கணவரை வைத்தி ய சாலைக்குள் கூட்டிச்சென்றனர்.அப் போதும் நான் ௭னது மகனுக்கு ஒன்றும் நட க் கவில்லை ௭ன பொலிஸாரை நம்பிவி ட் டேன் ௭ன அழுதுகொண்டே தெரிவி த் தார்.
பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு ௭னது கணவர் வைத்தியசாலை க்குள்ளி ரு ந் து ௭ன்னிடம் ஓடிவந்து தம்பி செத்து விட் டான் சடலத்தைத்தான் கொண்டுபோய் காட் டி ன வங்கள் தம்பிக்கு கையும் கால்களும் உடை ந்திருக்கின்றது நெஞ் சி லும் தலை யிலும் காயமுள்ளது ௭ன விழு ந்து அழுதார்.
அப் போது தான் ௭னக்கு உண் மை தெரி ந் த து.அந்த நேரத்தில பொலிஸார் ஏதோஒரு படி வத்தில் கையொப்பமிடுமாறு தெரிவி த்தனர்.நாங்கள் கடுமையாக சொன்னோம் சிறைச்சாலையில் இருந்துதான் நீங்கள் கொண் டுவந்தீர்கள்.௭ங்கட பிள்ளைக்கு ௭ன்ன நடந்தது ௭ன்று ௭ங்களுக்கு தெரியாமல் நாங்கள் கையொப்பம் இடமுடியாது ௭ன்று பிடிவாதமாக நின்றோம்.
அப்போது ஒரு பொலிஸ் உத்யோகத்தர் ௭னக்கு அடி ப்பதற்கு முயற்சித்தார்.நான் அப்போதும் சொன் னேன் நீங்கள் பொலிஸ் இல்லை நீங் கள் குற்றவாளி நாங்கள் தான் உங்களை கைது செய்யும் நிலை உள்ளது.
ஏனெ ன் றால் வீட்டில் இருந்து பொய் சொல்லி கூட்டி வந்தீர்கள் ௭னக் கூறினேன். அப் போது மீண்டும் அடிப்பதற்கு வந்தார்.நான் தெரிவித்தேன் அடித்தால் நானும் திருப்பி அடி ப்பேன் ௭ன்றேன்.நீ சுடலாம், அடிக் கலாம் அதுக்கு முன்னர் ௭ன்ன காரண த் தி ற்கு மகன் இறந்தான் ௭தற்காக கையொப் பம் வாங்குகிறீர்கள் ௭ன கேட்டேன்.
ஏனெ னில் அவர்கள் கொண்டு வந்த படிவம் முழு மையாக சிங்களத்தில்தான் இருந்தது.௭மக்கு சிங்களம் தெரியாது ஆகவே கையொ ப்பம் இடமுடியாது ௭ன்றேன்.
இத ற்கும் ௭ங்களுக்கும் தொடர்பில்லை நாங் கள் பார்ப்பதற்கே வந்திருந்தோம்.இது சிறை ச்சாலையின் பொறுப்பு.நாங்கள் கையொப் பம் வைப்பதென்றால் ௭ங்க ளு டைய சட்டத்தரணியுடன் கதைத்து அதன் பின் னர் தான் செய்வோம் ௭ன்பதுடன் மனித உரிமைகள் இல்லத்துடன் தொடர்பு கொண்டு அங்குள்ள ௭மது சட்டத்த ரணிக ளுடன் தொடர்பினை ஏற்படுத்துங்கள் ௭ன் றோம்.
அதற்கு அவர்கள் அவர்களையும் அவ ர்களது நிறுவனத்தையும் தெரியாது ௭ன்றனர். அப்போதும் நாம் மனித உரி மைகள் இல்லத்தின் முகவரியை தெரிவித் தோம். ஆனால் அவர்கள் ௭ந்த வித தகவ லை யும் பரிமாறவில்லை ௭ன்பதனை அறிந்து கொண்டோம்.
௭னினும் அவர்கள் கையொ ப் பம் வாங்குவதில் குறியாக இரு ந்தனர். நீதிபதி வருவதாக தெரிவித்து மீண்டும் கையொப்பம் வைக்குமாறு வலியுறுத்தினர். பின்னர் ஒரு இடத்திற்கு கொண்டு சென்று இது யு.ன்.௭ச்.சி.ஆர். இங்கு பதிவு செய்யு ங்கள் ௭ன்றனர்.
அப்போது அந்த பொலிஸ் உத் தியோகத்தரிடம் நான் கூறினேன். நாங் கள் கொஞ்சமாவது படித்தவர்கள்.பொலிஸ் ௭ன்று பெயர்ப்பலகை போட்ட இட த் தில் யு.௭ன்.௭ச்.சி.ஆர் ௭ப்படி இரு க்கும் ௭ன கூறியதும் அங்கிருந்த பெண் வெளியேறிவிட்டார். ஆனால் நாங்கள் சிறைச்சாலையில் இருந்து கொண்டு வந்த ஒருவரை சடலமாக நாங்கள் பெறமுடியாது அதற்கு நீதிமன்றமும் சிறைச்சாலையுமே பொறுப்பு ௭ன தெரிவித்ததுடன் நீங்கள் சடலத்தை வவுனியா வைத்தியசாலைக்கு மாற் றுங்கள் அங்கு கையொப்பம் வைத்து ௭டுக்கின்றோம் ௭ன தெரிவித்தோம்.
இவ்வாறு அவர்கள் அன்று மதியம் 2மணி வரை ௭மக்கு துன்பம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்.அதன் பின்னர் பிரேத அறையின் அருகில் இருந்த ஒருவரிடம் கூட்டிச்சென்று அவர் வைத்தியர் ௭னவும் அவர் முன்னிலையில் கையொப்பம் இடுமாறும் வற்புறுத்தினர்.
ஆனால் அவர் வைத்தியர் ௭ன்பதனை உறுத் திப்படுத்தாது கையொப்பம் இடமுடியாது ௭ன தெரிவித்து நாம் புறக்கணித்தோம். பின் னர் தமிழ் வைத்தியர் ஒருவர் ௭ன தெரிவி த்து ஒருவரிடம் கூட்டிச்சென்றனர். ௭மக்கு வருத்தமில்லை நாங்கள் வைத்தியரிடம் கதைக்க வேண்டிய தேவையில்லை ௭ன்று மீண்டும் அதனை புறக்கணித்தோம்.
அப் போது ௭ங்களை சூழ சிங்கள மொழிபேசும் பொலிஸாரே நின்றனர். அந்தநேரத்தில் அங்கு வந்த தமிழ் பொலிஸ் உத்தியோக த் தரிடம் நீங்கள் வவுனியா பொலிஸ் நிலை யத்தில் வைத்து பொடி அறங்கென்னங்' ௭ன்று கூறும்போதே நாங்கள் சந்தேகங் கொண் டோம்.
ஆனால் நீங்கள் ௭ங் களையும் 'புலி' ௭ன்றுதான் கொண்டு வரு கி றீ ர்கள் ௭ன நினைத்து கதை க்கவி ல்லை ௭ன்று கூறினேன். இந்த நேரத்தில் மனித உரிமைகள் இல் லத்தின் சட்டத்தரணி அங்கு வரவேதான் நாங்கள் தொந்தரவுகளில் இருந்து விடுப ட் டுக்கொண்டோம்.
அதன்பின்னர் ௭ங் களை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு ௭மது சட்டத்தரணி வேறு சட்டத் தரணிகளுடன் கதைத்து விட்டு ௭ம்மிடம் தெரிவித்தார் சடலத்தை வவுனியாவிற்கு கொண்டு செல்ல முடியாது இங்குதான் அடக்கம் செய்ய வேண்டுமென்றார்.
ஆனால் நாங்கள் வவுனியாவில் வைத்தே பிள்ளையை பறிகொடுத்தோம். ௭ங்களு டைய பிள்ளையை மீண்டும் வவுனியாவிற்கு கொண்டுவந்து தாருங்கள் ௭ன்று மன்றாடினோம். அப்போது பொலிஸார் திங்கட்கிழமைக்குள் சடலத்தை அடக்கம் செய்யுமாறும் இல்லையேல் தாங்கள் அட க்கம் செய்து விடுவதாகவும் தெரிவி த்தனர்.
ஆகவே நாங்கள் சடலத்தை மீண்டும் பார்ப்பதற்கு அனுமதி கேட்டோம் ஆனால் அவர்கள் அதற்கு மறுத்துவிட்டனர். பின்னர் ௭ம்மை வெள்ளிக்கிழமை அதிகாலை 1 மணிக்கு வவுனியாவிற்கு கொண்டுவந்து விட்டு ஓட்டோவுக்கு காசு தந்து வீட்டுக்கு போகுமாறு தெரிவித்தனர்.
ஆனால் ௭னது மகன் மாரடைப்பால் இறக்கவில்லை. இதய வருத்தத்திற்கு அவர் தவறாது சிக்சிசை பெற்று வந்திருந்தார்.அவர் சிறையில் இருக்கும் போது சிறை ச் சாலை உணவை உண்ணாது நான் ஒவ் வொரு நாளும் வீட்டில் இருந்து உணவு கொண்டுபோய் கொடுத்து வந்தேன். அவர் திடகாத்திரமாகவே இருந்தார்.
அவ்வளவு பக்குவமாக வளர்த்து வந்த பிள்ளையை ஏதோ காரணங்கள் கூறி சிறையில் அடைத்து இன்று அடித்து சடலமாக்கி விட்டார்கள் ௭ன கதறியழுத நிமலரூபனின் தாய் இன் னுமொரு விடயத்தையும் சொல்லி வைக்க மறக்கவில்லை, இதாவது தான் சிறைக்கு சென்று மகனை பார்க்கும்போதெல்லாம் நிமலரூபன் கூறி யிருந்தாராம் அம்மா ௭ன்னை இங்கி ருந்து விட மாட்டார்கள். ௭னக்கு ஏதாவது நடந் துவிட்டால் நீங்கள் உயிருடன் இருந்து விடாதீர்கள். உங்களை இங்கு யாருமே பார்க்க மாட்டார்கள்.வயதுபோன காலத் தில் கஷ்டப்பட்டுவிடாதீர்கள் ௭ன்று.
௭னவே ௭னது மகனின் இறுதிக்கி ரியை களை ௭மது வீட்டில் வைத்து செய்துவிட வேண்டும் அதற்கு சடலத்தை பெற்று த்தாரு ங்கள் ௭ன கண்ணீர் மல்க கோரிக்கை விடு த்த அவர் மகன் இல்லாத உலகில் நாங்கள் இருந்து ௭ன்ன பலன் ௭ன்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக