புதன், 11 ஜூலை, 2012

மதுபோதையில் வீட்டினை உடைத்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் கைது!

யாழ்.ஆனைப்பந்தியில் உள்ள வீடு ஒன்றுக்குள் மோட்டர் சைக்கிளில் வாள்கள் பொல்லுகளுடன் சென்று வீட்டினை உடைத்த குற்றச்சாட்டின் கீழ் பாடசாலை மாணவர்கள் மூவர் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்.ஆனைப்பந்தியிலுள்ள வீடு ஒன்றினுள் கடந்த 4ஆம் திகதி முகத்தை துணியினால் கட்டியவாறு மதுபோதையில் வாளுடன் சென்று வீட்டின் கதவு மற்றும் கண்ணாடிகளை உடைத்துள்ளதாக வீட்டின் உரிமையாளரினால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த பாடசாலை மாணவர்கள் மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இவர்கள் மூவரும் நாளைய தினம் யாழ். நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக யாழ்.பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக