ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ செல்லப்பிராணியான கிளி நேற்று முன்தினம் (25) கூண்டைவிட்டு வெளியே வந்து துறைமுகப் பிரதேசத்தை நோக்கிப் பறந்ததாக தெரியவருகிறது. இந்தக் கிளி அமெரிக்க காடுகளில் வாழ்கின்றன மெகோ ரகத்தைச் சேர்ந்ததாகும்.கிளி துறைமுக பிரதேசத்திற்கு சென்றதை அடுத்து ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் சிவில் உடையில் நடமாடிய சிலரும், கிளியைப் பராமரிக்கும் ஊழியர்களும் சென்று கிளியைப் பிடிப்பதற்கு முயற்சித்துளு;ளனர்.
துறைமுகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலர் கிளியைப் பிடிக்க முயற்சித்துள்ள போதிலும் அதுகைகூடவில்லையெனத் தெரியவருகிறது. இந்த முயற்சி மாலை வரை மேற்கொள்ளப்பட்டபோதிலும் அது வெற்றியளிக்கவில்லை. இதன்போது கிளி மர உச்சியின் கிளைகளுக்கு மாறி மாறி பறந்ததாக நேரில் பார்த்த ஊழியர் சிலர் தெரிவித்துள்ளனர்.
கிளியைப் பார்த்ததை அடுத்து காகங்கள், அதனைக் கொத்த ஆரம்பித்துவிட்டதாகவும், இதன்போது காகங்களை விரட்டுவதற்காக பட்டாசுகளைக் கொளுத்தி, காகங்களிடமிருந்து கிளியை காப்பாற்ற முயற்சித்ததாகவும் தெரியவருகிறது. இந்த பரபரப்பினால் கிளி குழப்பமடைந்துள்ளது.
தற்போது அந்தக் கிளி துறைமுகப் பிரதேசத்திலிருந்தும் பறந்துசென்றுள்ளதாகவும், கிளியைத் தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாகவும் தெரியவருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக