சனி, 11 ஆகஸ்ட், 2012

சம்பந்தனுடன் கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடினார்!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார்.
இம்மாநாட்டில் தான் பங்குபற்றுவதாக தான் உறுதிப்படுத்தவில்லை என இரா. சம்பந்தன் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
"கருணாநிதி என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நாம் இன்னும் தீர்மானம் மேற்கொள்ளவில்லை" என அவர் கூறினார்.
இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். ஆகிய கட்சிகள் ஏற்கெனவே ஆட்சேபம் தெரிவித்துள்ளன. ஜனநாயக மக்கள் முன்னணியும் இம்மாநாட்டில் பங்குபற்றுவதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக