திங்கள், 13 ஆகஸ்ட், 2012

விக்கிரமபாகு கருணாரத்ன அதிர்வு இணையத்துக்கு சிறப்புப் பேட்டி!

இலங்கை நவசமாஜக் கட்சித் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன அதிர்வு இணையத்துக்கு சிறப்புப் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். அதில் தாமும் தமது கட்சியும் 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். டெசோ மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற விக்கிரமபாகு அவர்கள், இலங்கையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்படவேண்டும் எனவும், தமக்கு 13 வது திருத்தச் சட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும் தெளிவாகத் தெரிவித்துள்ளார். டொசோ மாநாட்டில், இதற்கு எதிரான தீர்மானத்தை ஏன் கொண்டுவரவில்லை என அதிர்வின் நிருபர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இம் மாநாட்டில் உள்ள பிரேரணைகளில் அவை சேர்த்துக்கொள்ளப்படவில்லை எனப் பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக