அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலொசகரும் மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டருடனான மக்கள் சந்திப்பொன்று ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால் ஆவணி மாதம் 26ம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள�� முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்திருக்க மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் கருத்துப் பரிமாற்றமும் சிறப்பாக இடம்பெற்றது.
கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் தமது ஆரம்ப உரையில் தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் விடயத்திலும் தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் கனேடிய அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். கனேடியப் பிரதமர் திரு.ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்கள் ஏற்கனவே உறுதிகூறியபடி இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையில் 2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் பங்குபற்றுவது பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லையென்றும் அம் மாநாட்டில் கலந்து கொள்வது சாத்தியப்படாதென்றும் கூறினார். அத்துடன் இப்பொழுது கனடா மட்டுமே உலக அரங்கில் ஊக்கமெடுத்து குரல் எழுப்புகிறதென்றும்�� இந்த அறிவுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்க்காவிடின் இன்னும் பல நாடுகள் கனடாவுடன் இணைந்தால் இலங்கையில் ஒரு சிக்கலான சூழ்நிலையே உருவாகும் எனவும் எச்சரித்தார்.
வட கிழக்கு தமிழர் பற்றி கனடா உறுதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக