வியாழன், 30 ஆகஸ்ட், 2012

கருணாநிதி என்ன சொல்கிறார்



இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு யார் காரணம் ஜெயலலிதாவா, நானா? -கருணாநிதி கேள்வி
இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. ஜெயலலிதா சொன்னதால்தான் இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்தனர். எனவே, இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு யார் காரணம் ஜெயலலிதாவா, நானா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வியெழுப்பியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்று சொல்வதற்கு மாறாக, திமுகவையும் என்னையும் (கருணாநிதி) திட்டுவதுதான் நோக்கம் என்ற அடிப்படையில் வார்த்தைகளைக் கொட்டியிருக்கின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்காக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முற்றிலும் என் மீதான தாக்குதல்கள்தான்.
இலங்கையில் இனக் கலவரம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்றும், அப்பாவி இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு நான்தான் காரணம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று 2006-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை இராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவர்' என்று இறுதி யுத்தம் நடைபெற்ற 2009-ம் ஆண்டு ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டார்.
இப்படியெல்லாம் ஜெயலலிதா சொன்னதால்தான் இலங்கைத் தமிழர்களை இலங்கை இராணுவத்தினர் கொன்று குவித்தனர். எனவே, இலங்கைத் தமிழர்கள் அழிவுக்கு யார் காரணம் ஜெயலலிதாவா, நானா?
இறுதி யுத்தத்தின்போது நான் ஒன்றும் செய்யவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர்களுக்காக மனித சங்கிலி நடத்தினோம். அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். சென்னையில் பேரணி நடத்தினோம். பந்த் நடத்தினோம். இதற்கெல்லாம் மேலாக 27.4.2009- அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினேன்.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை போர் நிறுத்தம் செய்யப்பட்டுவிட்டது என்று பொய்யான தகவலைக் கூறி நான் கைவிட்டதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
ஆனால், இலங்கையில் போர் நடவடிக்கைகள் முற்றுப்பெற்றுவிட்டன என்று அன்றைக்கு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி அறிக்கை வெளியிட்டதன் பேரிலேயே உண்ணாவிரதத்தைக் கைவிட்டேன்.
மத்திய முக்கிய அமைச்சர் ஒருவரே இவ்வாறு அறிவித்த பிறகும் எப்படி நம்பாமல் இருக்க முடியும் என்று கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக