தாக்குதலுக்குள்ளாகி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த சுந்தரம் சதீஸ் என்ற அரசியல் கைதி நேற்றிரவு அவசரமாக கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில்...
“தீவிரமான தாக்குதலுக்குள்ளான சதீஸ் - கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் அவரது நிலைமை மோசமடைந்திருப்பதால் அவசரமாக கொழும்புக்கு நேற்றிரவு அழைத்துவரப்பட்டிருக்கிறார். சதீஸின் இடதுபக்கம் பரலைஸ் நிலையில் காணப்படுவதாகவும் தாக்குதலில் நரம்பு பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாகவும் அவரது மனைவி கவிதா எம்மிடம் தெரிவித்தார். மிலேச்சத்தனமான இத்தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கின்றோம்” என்று மனோ கணேசன் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக