தீயவர்களையும் நல்லவர்களாக மாற்ற அன்பினால் மட்டுமே முடியும்!
வியாழன், 30 ஆகஸ்ட், 2012
இனியபாரதிக்காக “குதிரை ஓடிய” நபர் மாட்டிக்கொண்டார்!
சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் துணை ஆயுதக்குழுவான கருணாகுழுவின் முக்கியஸ்தருமான இனியபாரதிக்காக பரீட்சை எழுதிய நபர் அம்பாறையில் மாட்டிக்கொண்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றிருக்கின்
நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அரசறிவியல் பாடத்திற்காக நபர் ஒருவர் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த சமயத்தில் பரீட்சைப் பரிசோதகர்களால் குறித்த நபரின் நடவடிக்கை தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. உடனடியாக அவர் தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்த போது அவர் போலியாக மற்றொருவருக்காக பரீட்சை எழுதிக்கொண்டிருந்தமை இனங்காணப்பட்டிருக்கின்றது.
குறித்த பரீட்சார்த்தியை விசாரணைக்கு உட்படுத்திய போது, அவர் தன்னை எதுவும் செய்யவேண்டாம் என்றும் தன்னை பரீட்சை எழுதுமாறு நிர்பந்தித்தவர் கருணாகுழுவின் முக்கியஸ்தரான இனியபாரதி தான் என்று அவர் தெரிவித்திருக்கின்றார். இந் நிலையில் அவர் கருணா குழு இனியாரதிக்காக பரீட்சை எழுதியதமையால் அவருக்கு நடவடிக்கை எடுத்தால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடலாம் என்ற அச்சம் காரணமாக தண்டனை எதுவும் இல்லாது அவரை வெளியேற்றியிருப்பதாக அம்பாறையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் நடைபெற்ற அதே நாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச அம்பாறைக்கான பயணத்தினை மேற்கொண்டிருந்ததாகவும் நாமல் பங்கேற்ற நிகழ்வுகளுக்கு இனியபாரதியும் கூடவே சென்றிருந்ததாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இனியபாரதிக்கு “தேசபந்து“, “கலாநிதி” ஆகிய கௌரவ பட்டங்கள் அரச உயர் மட்டத்தின் ஏற்பாட்டில் வழங்கப்பட்டிருந்ததாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக