திங்கள், 17 செப்டம்பர், 2012

சர்வதேச ரீதியில் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் படையினரைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளும் 17 செப்டம்பர் 2012 முன்னெடுக்கப்படும் - பசில்

சர்வதேச ரீதியில் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் படையினரைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளும்
சர்வதேச ரீதியில் எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றுக்கொடுத்த படையினரைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் தலைமைத்துவம் வழங்கினாலும் நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்தியில் நாட்டை கட்டியெழுப்புவதில் முக்கிய பங்கினை முப்படையினரே வகித்து வருகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சர் அவர்களுக்காக நாடளாவிய ரீதியில் 50,000 வீடுகள் நிர்மாணித்து வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திபுலபிட்டியவில் படையினருக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகளைக் கையளிக்கும் வைபவம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் திவுலப்பிட்டிய ஹூணுமுல்ல மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அமைச்சர் பசில் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.
2005 நவம்பர் 17 ஆம் திகதி நாட்டு மக்கள் நாட்டின் ஆட்சியதிகாரத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களிடம் ஒப்படைத்தனர். அவர் அதைப் பொறுப்பேற்கும் போது நாட்டின் பூமிப் பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே இருந்தது. அதே போன்று கடற்பரப்பில் மூன்றில் ஒரு பகுதியே அரச நிர்வாகத்திடம் இருந்தது.
ரணில் – பிரபாகரன் உடன்படிக்கை மூலம் நாட்டின் மீதான பகுதி உத்தியோகபூர்வமாக புலிகளின் நிர்வாகப் பிரதேசமென ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த நிலையில் முப்படையினர் தமது சீருடையுடன் புலிகளின் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டுமானால் புலிகளின் அனுமதிபெற்றே செல்ல வேண்டியிருந்தது.
அதுமட்டுமின்றி சாதாரண பிரஜைகள்கூட ஓமந்தைக்கு அப்பால் செல்ல வேண்டுமானால் புலிகளின் அனுமதிபெற வேண்டியிருந்தது. அது போன்ற நிலையிலிருந்த நாட்டையே ஜனாதிபதி பொறுப்பேற்றிருந்தார். அவரது வழிகாட்டலில் பாதுகாப்பமைச்சின் செயலாளரின் தலைமையில் முப்படையினரின் தியாகத்தின் மூலம் குறுகிய காலகட்டமொன்றில் முழு இலங்கையையும் ஒரே நாடாக ஒரே கொடியின் கீழ் கொண்டுவர முடிந்தது. இந்த நாட்டினதும் முப்படையினரினதும் உயிர்த்தியாகத்தால் தான் இதனை ஜனாதிபதியினால் மேற்கொள்ள முடிந்தது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
மகிந்த சிந்தனை இதற்கு உறுதுணையாகியது. இதில் பாதுகாப்புச் செயலாளரின் பங்கு மிக முக்கியமானது. நாட்டிலுள்ள ஆயுதங்களைவிட அதன் பின்னணியிலுள்ள படைவீரர்களே வெற்றிக்குக் காரணம் என்று அவர் அடிக்கடி கூறுவார். ஒரு பக்கம் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் மறுபக்கம் அதற்காக சிறந்த படையினரை உருவாக்குதல் இரண்டிலும் அவரது கவனம் செலுத்தப்பட்டது. அதேபோன்று படையினரைப் பாதுகாக்கவும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாக்கவும் பல்வேறு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன எனவும் பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக