அச்சுறுத்தல் காரணமாக ஐந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய ஐந்து மாகாண உறுப்பினர்களே இவ்வாறு கிழக்கு மாகாணத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
குறித்த ஐந்து புதிய மாகாணசபை உறுப்பினர்களும் கொழும்பிற்குச் சென்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர். இனந்தெரியாத சிலர் ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்தால் சலுகைகளும் வரப்பிரசாதங்களும் வழங்கப்படும் என தமது கட்சி உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக