இலங்கை நாடாளுமன்றத்தில் 1960ம் ஆண்டுமுதல் 1983ம் ஆண்டுவரையில் தொடர்ந்து 23 ஆண்டுகள் உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராக மக்களுக்கு சேவையாற்றி அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பெற்ற விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் 27ம் ஆண்டு நினைவுதினம் நேற்று முன்தினம் 02.09.2012ல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் அமரர் தர்மலிங்கம் நினைவுக்குழுவினரின் ஏற்பாட்டில் யாழ் தாவடியில் அமைந்துள்ள அன்னாரின் நினைவுத் தூபிக்கு மலரஞ்சலியும் தொடர்ந்து மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் மற்றும் அமரரின் நெருங்கிய நண்பர்கள், அரசியல்-சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களும், பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.
பின்னர் மாலை 4.30 மணிக்கு சுன்னாகம் பொது நூல்நிலைய மண்டபத்தில் மானிப்பாய் பிரதேசசபை துணைத் தலைவர் கௌரிகாந்தன் தலைமையில் நினைவுரை நிகழ்வுகள் இடம்பெற்றன. இதில் சுன்னாகம் பிரதேசசபை தலைவர் பிரகாஷ், வலிகாமம் மேற்கு பிரதேசசபை தலைவர் ந.ஐங்கரன், தமிழரசுக்கட்சி இளைஞர் அணி தலைவர் கஜதீபன், வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் .வை.பாலச்சந்திரன் உட்பட மானிப்பாய் தொகுதி வாழ் சமூக முக்கியஸ்தர்களும் அன்னாரின் நெருங்கிய நண்பர்கள் பலரும் அவரது புதல்வரும் புளொட் அமைப்பின் தலைவருமான திரு.த.சித்தார்த்தனும் நினைவுரைகளை ஆற்றியிருந்தன

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக