செவ்வாய், 4 செப்டம்பர், 2012

மாகாண சபை தேர்தல்: பிரசாரங்கள்


கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்நாளை நள்ளிரவுடன் முடிதிய மாகாண சபைகளுக்கான தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை (5) நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் இறுதிச் சுற்று தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்துள்ளன.
தேர்தல் நடைபெறவுள்ள அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, கேகாலை, இரத்தினபுரி, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஏழு மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சி வேட்பாளர்கள் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
களத்திலுள்ள பிரதான கட்சிகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தமது இறுதிச் சுற்று பிரசார நடவடிக்கைகளை தமது கட்சித் தலைவர்கள் தலைமையில் இன்றும் நாளையும் வெகு விமர்சையாக முன்னெடுக்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, நாளை கல்முனை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் தேர்தல் இறுதிப் பிரசாரங்களில் மும்முரமாக ஈடுபடவிருப்பதாக கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கூறினார்.
ஐ.ம.சு.முவின் இறுதிப் பிரசாரக் கூட்டம் நாளை (5) அக்கரைப்பற்றில் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெறும்.
முஸ்லிம் காங்கிரஸ் தமது இறுதிப் பிரசாரங் கள நடவடிக்கைகளை நாளை அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்க வுள்ளது. முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களிலும் நாளை பொதுக் கூட்டங்களை நடத்துவாரென எதிர்பார்க் கப்படுகிறது.
இதேவேளை மக்கள் விடுதலை முன் னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் தமது இறுதிப் பிரசார பொதுக் கூட்டத்தை இன்று நடத்துகின்றன. மக்கள் விடுதலை முன்னணி இன்று (4) அநுராதபுரத்தில் மாபெரும் பிரசாரக் கூட்டத்தை அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க தலைமை யில் நடத்தவிருப்பதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று மாலை 3 மணிக்கு கேகாலையில் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பொது பிரசாரக் கூட்டத்தை நடத்துவதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 08 ஆம் திகதி சனிக் கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய அறி வித்துள்ளார்.அந்த வகையில் நாளை 05 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பிரசார நடவடிக்கைகள் யாவும் முடிவடை கின்றன. தேர்தல் சட்ட விதி முறைகளை மீறி, 6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கட்சி சார்பிலோ அல்லது வேட்பாளர் ஒருவர் சார்பிலோ பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தலில் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக