3 தமிழர்களின் உயிர் காப்பதில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும்:- சீமான் வேண்டுகோள்.
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகியோரின் உயிரை தூக்குக் கயிற்றில் இருந்து காக்கும் சட்டப் போராட்டத்தில் தமிழக முதல்வர் உறுதியாக நிற்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேட்டுக்கொண்டார்.
முருகன், சாந்தன், பேரளிவாளன் ஆகிய மூவரின் உயிர் காக்க தன்னையே தீக்கீரையாக்கிக்கொண்ட உயிர்த் தியாகம் செய்த வீரத் தமிழச்சி செங்கொடியின் முதலாண்டு நினைவுப் பொதுக்கூட்டம் காஞ்சி நகரில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் சிறப்புரையாற்றினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக