வடக்கு நோக்கி சுற்றுலாப்பயணிகள் படையெடுத்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.இரண்டாம் தவணை விடுமுறை தினத்தை கொண்டாட பெரும்பாலான சிங்கள மக்;கள் இம்முறை வடக்கையே தெரிவு செய்திருந்தனர்.குறிப்பாக வன்னி மற்றும் யாழ்ப்பாணமே அவர்களது தெரிவாக இருந்தது.முள்ளிவாய்க்காலில் உள்ள போர் காட்சியகம் மற்றும் பிரபாகரனது வதிவிடமென கூறிக்கொள்ளும் முகாம் என்பவை அவற்றினுள் முக்கியமானவை.
அவ்வகையில் யாழ்ப்பாணத்தில் நயினாதீவும் குறிப்பிடத்தக்கது. ஓரு நாளில் மட்டும் 80 ஆயிரம் பேர் நயினாதீவிற்கு பயணித்து சாதனை புரிந்துள்ளனர்.அதே போன்று பத்து மில்லியனிற்கு மேற்பட்டோர் வடக்கிற்கு பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.மிகவும் ரகசிய விஜயமாக அவரது விஜயம் வைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக பயண விபரங்கள் மறைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. எனினும் அவரால் அரியாலைப்பகுதியில் மீளக்குடியமர்ந்த மக்களுககெ வழங்கப்பட்ட சூரிய மின்கலங்கள் பற்றி கண்டறியவே அவரது விஜயம் அமைந்திருந்ததாக கூறப்படுகின்றது. நல்லூரிற்கும் அவர் பயணித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக