திங்கள், 3 செப்டம்பர், 2012

கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெறும்

நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெறும் என்றும் இரண்டாவது நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் ஆசனங்களை பெறும் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள பத்திரிகையான திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு ஆதரவான இப்பத்திரிகை இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தேர்தலின் பின் இந்த இரு கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சி அமைப்பதற்கு ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் பேச்சு நடத்தி வருகின்றன என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை தேர்தலில் களமிறங்கி இருப்பதும், முஸ்லிம் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதும், கிழக்கு மாகாண தேர்தல் களத்தை சூடு பிடிக்க செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக ஆசனங்களை கைப்பற்றும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் அதிகளவான ஆசங்களை கைப்பற்றும் எனவும் அரசியல் அவதானிகள் கூறுகின்றனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் மாகாண சபையில் அதிக ஆசனங்களை கைப்பற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து மாகாண சபையின் ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக்கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் இடையில் போட்டி ஏற்பட்டுள்ளதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக