வெள்ளி, 14 செப்டம்பர், 2012

கூட்டமைப்பு – முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு – கிழக்கில் ஆதரவு யாருக்கு?

கிழக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தை இன்று மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்தையில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸிடம் கூட்டமைப்பு ஆதரவைக் கோருவதுடன், முதலமைச்சர் பதவி உட்பட மேலும் பல விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எது எவ்வாறாயினும் முஸ்லிம் காங்கிரசின் இறுதி முடிவு நாளைய தினம்ஹக்கீமினால் வெளியிடப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் முடிவுகளின் அடிப்படையில் அங்கு ஆட்சி அமைப்பதற்கு எந்த கட்சியும் பெரும்பான்மையை கொண்டிருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்தையும் சேர்த்து 15 ஆசனங்களை வெற்றிக்கொண்டுள்ளது.
11 ஆசனங்களை வென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஐக்கிய தேசிய கட்சியும் மொத்தமா15 ஆசனங்களை தன்னகத்தே கொண்டுள்ளன.
இந்த நிலையில் 7 ஆசனங்களை வெற்றி கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு இரு தரப்புக்கும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
எனினும் முதலமைச்சர் பதவி தமக்கு தேவை என்ற நிலைப்பாட்டுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கில் ஆட்சி அமைப்பது தொடர்பில் அரசாங்கத்திடம் தமது யோசனையை முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் நேற்று இலங்கை அரசதரப்பினருடன் முஸ்லிம் காங்கிரஸ் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கிழக்கு மாகாண சபையில் புதியதொரு ஆட்சியை ஏற்படுத்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், அமையவுள்ள கிழக்கு மாகாணசபையில் அமைச்சுப் பொறுப்பொன்றும் மு.காவுக்கு வழங்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளது என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பில் இன்னும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் வெளிவராத நிiலியல் கூட்டமைப்பினருடனான முஸ்லிம் காங்கிரஸின் இந்த சந்திப்பானது வெறும் கண்துடைப்பு நாடகம் என அரசியல் விமர்சகர்கள் விமர்சிக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக